search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமன் குமார்"

    • எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது.
    • சினிமா தலைசீவ வழியில்லாதவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும்.

    அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ நடராஜ் தயாரிப்பில் ஈ.கே. முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'பார்க்' என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் இசை மட்டும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகத் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் சிங்கம் புலி பேசும்போது, "நான் போட்டோ ஸ்டுடியோவில் பிலிம்களை டெவலப் செய்யும் டார்க் ரூமில் ஆறு மாதம் தங்கி இருந்தேன். ஒன்றுமே பார்க்க முடியாது. லைட் போட மாட்டார்கள் சின்ன சிவப்பு விளக்கு மட்டுமே எரியும். எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது."

     


    "இப்படி எல்லாம் சிரமப்பட்டுத் தான் சினிமாவுக்கு வந்தோம். இப்படிச் சிரமப்படுவது பிற்காலத்தில் நன்றாக இருப்பதற்காகத்தான். கதாநாயகன் தமன் வெளிநாட்டில் ஏர்லைன்ஸில் மாதம் 4 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர். அதையெல்லாம் விட்டுவிட்டுச் சினிமாவுக்கு வந்திருக்கிறார்."

    "சினிமா அவரைக் கைவிடாது. ஏனென்றால் அவர் சினிமாவை நேசிக்கிறார். சினிமா இரண்டு பேருக்கு வாய்ப்பு கொடுக்கும். தலை சீவ முடியாத அளவிற்கு அடர்த்தியான முடி கொண்டவர்களுக்கும், தலையில் முடியே இல்லாது தலைசீவ வழியில்லாதவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும்," என்று தெரிவித்தார்.

    இயக்குநர் முருகன் இயக்கி இருக்கும் பார்க் படத்திற்கு அமரா இசையமைக்க, பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு நொடி' படத்தின் கதாநாயகன் தமன் குமார் நடித்துள்ளார்.
    • கதாநாயகியாக ஸ்வேதா டோரதி நடித்துள்ளார்.

     இன்றைய திரையுலகச் சூழலில் ஹாரர் படங்களுக்கு ஒரு குறைந்தபட்ச வணிக உத்திரவாதம் உண்டு. அந்த வகை நம்பிக்கையில் 'பார்க்' என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது.

    இப்படத்தை E.K.முருகன் இயக்கியுள்ளார் .இவர் இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றவர். அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் E.நடராஜ் பார்க் படத்தைத் தயாரித்துள்ளார்.

    இப்படத்தில் கதாநாயகனாக சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஒரு நொடி' படத்தின் கதாநாயகன் தமன் குமார் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்வேதா டோரதி நடித்துள்ளார். பிரதான வில்லனாக யோகிராம் நடித்துள்ளார்.கதாநாயகியின் தந்தையாகத் தயாரிப்பாளர் லயன் ஈ.நடராஜ் நடித்துள்ளார்.இவர்களைத் தவிர காமெடியில் கலக்கி கொண்டிருக்கும் பிளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், கராத்தே ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    திருவண்ணாமலையில் ஒரு பூங்காவில் நடைபெறும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் நடந்துள்ளது.

    படம் பற்றி இயக்குநர் ஈ.கே. முருகன் பேசும்போது,

    "இது ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் காமெடி கலந்த திரில்லர் என்ற வகையில் உருவாகியுள்ளது.

    இந்தப் படத்தின் கதையைத் தயாரிப்பாளரிடம் கூறிய போது நான் சொன்னேன். படத்தின் முதல் பாதி வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்; இரண்டாவது பாதி இதயம் வலிக்கப் பயமுறுத்தும் என்றேன்.அதன்படி கதையையும் சொன்னேன் அவருக்குப் பிடித்திருந்தது.சரியாகத் திட்டமிட்டு 36 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்து, படத்தை நிறைவு செய்திருக்கிறோம்.

    அண்மையில் வெற்றி பெற்ற ஒரு நொடி படத்தில் நடித்துள்ள தமன்குமார் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் .அதேபோல் சமீபத்தில் வெளிவந்த லாந்தர் படத்தில் நாயகியாக நடித்த ஸ்வேதா டோரத்தி நாயகியாக நடித்துள்ளார்.அதேபோல் அண்மை வெற்றிப் படமான கருடன் படத்தில் வில்லனாக நடித்த யோகிராம் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

    ஹாரர் படங்களுக்கு என்றும் வரவேற்பு இருக்கும். முதலீடு செய்யும் தயாரிப்பாளரையும் காப்பாற்றி விடும்.எனவே இந்த வகைப் படத்தை எடுக்கத் தீர்மானித்து முடித்தோம்.

    இப்படம் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். ஆகஸ்டில் இப்படத்தை வெளியிடுவதாகத் திட்டமிட்டு இருக்கிறோம்" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • அறிமுக இயக்குனரான மணிவர்மன் இயக்கத்தில் கடந்த மாதம் இறுதியில் ’ஒரு நொடி’ திரைப்படம் வெளியானது.
    • அமோஹம் பிக்சர்ஸ் சார்பாக சுபாஷினி மற்றும் வொயிட் லாம்ப் பிக்சர்ஸ் சார்பாக ரத்தீஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    அறிமுக இயக்குனரான மணிவர்மன் இயக்கத்தில் கடந்த மாதம் இறுதியில் 'ஒரு நொடி' திரைப்படம் வெளியானது.

    வெளியான இந்த படத்தில் 'தொட்டால் தொடரும்' பட நாயகனும் 'அயோத்தி' படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்த தமன் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபா ஷங்கர், சிவரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மதுரை அழகர் புரொடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படம் வெலியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கதிக்களத்தையும் திரைக்கதையை அமைத்தது படத்டின் கூடுதல் பலம். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிவர்மன் மீண்டும் தமன் குமார் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார்.

    அமோஹம் பிக்சர்ஸ் சார்பாக சுபாஷினி மற்றும் வொயிட் லாம்ப் பிக்சர்ஸ் சார்பாக ரத்தீஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இன்று பாண்டிச்சேரியில் தொடங்கியது.

     

    மல்வி மல்ஹோத்ரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார், மைதிரேயா ரக்ஷா செரின், அருன் கார்த்தி, காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, சந்தான பாரதி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். படத்தின் தயாரிப்பாளரான ரத்தீஸ் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில், வருகிற ஏப்ரல் 26-ல் தியேட்டர்களில் இப்படம் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்து உள்ளது.
    • 'காற்றின் ஒருவன்', 'கொலைகாரன்' போன்ற படங்களை வெளியிட்டவருமான தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்

    புதுமுக இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'ஒரு நொடி'. இந்த படத்தில் 'தொட்டால் தொடரும்' பட நாயகனும் 'அயோத்தி' படத்தில் நடித்த தமன் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் மேலும், எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபாஷங்கர், சிவரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.




    மதுரை அழகர் புரொடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளது. அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் தற்போது இப்படம் தயாரிப்பு பணிகள் முழுமையடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.




    இந்நிலையில், வருகிற ஏப்ரல் 26-ல் தியேட்டர்களில் இப்படம் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்து உள்ளது.

    பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், 'காற்றின் ஒருவன்', 'கொலைகாரன்' போன்ற படங்களை வெளியிட்டவருமான தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஒரு நொடி’.
    • இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார்.

    அறிமுக இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஒரு நொடி'. இந்த படத்தில் 'தொட்டால் தொடரும்' பட நாயகனும் 'அயோத்தி' படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்த தமன் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபா ஷங்கர், சிவரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    மதுரை அழகர் புரொடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எஸ்.குரு.சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.


    பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், 'காற்றின் மொழி', 'இவன் தந்திரன்', 'கோடியில் ஒருவன்', 'கொலைகாரன்' போன்ற படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார்.


    'ஒரு நொடி' படத்தின் படப்பிடிப்புகள் முழுமையடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்ற நிலையில், வெகுவிரைவில் திரையில் இப்படத்தை காணலாம். படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிடப்படும்.

    ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வினய் - தமன் குமார் - சுபிக்‌ஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `நேத்ரா' படத்தின் விமர்சனம். #Nethra #NethraReview #Vinay #ThamanKumar #Subhiksha #Riythvika
    தமன் குமாரும், சுபிக்‌ஷாவும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், சுபிக்‌ஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த திருமணத்தில் விருப்பமில்லாததால், கனடாவில் இருக்கும் தனது நண்பர் வினய்யிடம் உதவி கேட்கிறார் சுபிக்‌ஷா.

    இதையடுத்து தமன் குமார், சுபிக்‌ஷாவை கனடாவுக்கு வரவைக்கும் வினய், வேறுஒரு வேலையாக வெளிநாடு செல்கிறார். இந்த நிலையில், கனடா வரும் இவர்களுக்கு அந்த நாட்டு போலீசார் உதவுகிறார்கள். பின்னர், இமான் அண்ணாச்சி வேலை பார்க்கும் ஹோட்டலில் தமன் குமாருக்கு வேலை கிடைக்கிறது.



    இந்த நிலையில், தமன் குமார் காணாமல் போகிறார். இதுகுறித்து சுபிக்‌ஷா, போலீசில் புகார் தெரிவிக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்க, தமன் குமார் என்ற ஒருவர் வரவேயில்லை என்றும், சுபிக்‌ஷா மட்டுமே வந்ததாகவும் அனைவரும் கூறுகின்றனர். இந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க தொடங்குகிறார் வெங்கடேஷ். இதற்கிடையே வினய் கனடா திரும்புகிறார்.

    கடைசியில், தமன் குமாரை மாயமானதன் பின்னணி என்ன? அவர் என்னவானார்? அவரை யார் கடத்தினார்கள்? சுபிக்‌ஷா - தமன் குமார் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    தமன் குமார் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரத்தில் சுபிக்‌ஷா தனது திறமையை நிரூபித்திருக்கிறார். காதல், நட்பு, போராட்டம் என சுபிக்‌ஷாவை சுற்றியே கதை நகர்கிறது. கதையின் ஓட்டத்திற்கு வினய் முக்கிய காரணியாகிறார். வலுவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். 

    இமான் அண்ணாச்சி ஓரிரு இடங்களில் காமெடி செய்கிறார். ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்திரன் காமெடி ஓரளவுக்கு வேலை செய்கிறது. மற்றபடி வெங்கடேஷ், ரித்விகா, வின்சென்ட் அசோகன், ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கின்றனர்.



    ஆள் தெரியாத ஒரு ஊரில் காதலனை இழந்து தவிக்கும் ஒரு பெண்ணின் கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ். படம் பெரும்பாலும் கனடாவிலேயே உருவாகி இருக்கிறது. படத்தின் முதல் பாதி வேகமாக நகர, இரண்டாவது பாதியின் நீளம் அதிகமாக இருப்பது படத்தின் மீது தொய்வை ஏற்படுத்துகிறது. திரைக்கதையை கொஞ்சம் வலுப்படுத்தியிருக்கலாம்.

    என்.கணேஷ் குமாரின் படத்தொகுப்பு, ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஏ.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவும் அருமை.

    மொத்தத்தில் `நேத்ரா' தெளிவில்லை. #Nethra #NethraReview #Vinay #ThamanKumar #Subhiksha #Riythvika #AVenkatesh 

    வனஷாக்ஷி கிரியேசன்ஸ் பெருமையுடன் வழங்க, தமன்குமார், மியாஸ்ரீ நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம் திகிலான திருப்பங்களுடன் உருவாக்கி இருக்கிறார்கள்.
    நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் - மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்.

    கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு, எதிர்பார்த்ததைப் போல் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் கையிருப்பும் கரைந்து போவதால், எதிர்மறை எண்ணம் தலைதூக்கத் துவண்டு போகிறார். அவரது மனைவி தான் அவருக்கு ஆறுதலாக இருந்து நம்பிக்கை தந்து வருகிறார். 

    ஒருகட்டத்தில் அவருக்கு வர வேண்டிய தொகை முழுதும் கிடைத்து விட, தனது நீண்ட நாள் கனவான சொந்த வீட்டை வாங்க நினைக்கிறார். அதற்காக அழகான ஒரு வீட்டையும் தேர்வு செய்கிறார். எதிர்பாராத விதமாக அந்த நொடியிலிருந்து அவரது குழந்தையைச் சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. இதெல்லாம் ஏன் நடக்கிறது? என புரியாமல் குழம்பிப் போகிறார் நாயகன். தனது மனைவிக்கும், குழந்தைக்கும் தெரியாமல் இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க நினைக்கிறார். நாயகன் அந்த முயற்சியில் இருக்கும் போதே, அவரது குழந்தை ஒரு மர்ம நபரால் கடத்தப்படுகிறாள்.



    எதற்காக அந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தன?, அந்த வீட்டிற்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு?, குழந்தையைக் கடத்திய மர்ம நபர் யார்? எதற்காக அவர் குழந்தையைக் கடத்தினார்? இவற்றை எல்லாம் அந்த நாயகன் எவ்வாறு கண்டு பிடிக்கிறார்? என்பதை முழுக்க முழுக்க ஒரு குழந்தையைச் சுற்றி பின்னப்பட்ட திரைக்கதையில் திகிலான திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் படமாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி.

    இப்படத்தில் “தொட்டால் தொடரும்”, “சட்டம் ஒரு இருட்டறை”, “6 அத்தியாயங்கள்” போன்ற படங்களில் நடித்த தமன் குமார் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடித்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஷ்வி, கண்மணி பாப்பாவாக நடித்துள்ளார். இவர்களுடன் சிங்கம்புலி, சந்தோஷ் சரவணன், சிவம், நாகா, ஹேமா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

    ×